மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின்படி மதுரையில் தொடர் செயின் பறிப்பு வழக்குகளில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக பிடிக்க அனைத்து குற்றப்பிரிவு அனைத்து காவல் அதிகாரிகளும் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அவர்களை கைது செய்துள்ளானர்.
மதுரை,அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுரேஷ் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி வந்த நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் சமய நல்லூரைச் சேர்ந்த அஜித்குமார் வில்லாபுரத்தை சேர்ந்த தவமணி சிந்தாமணியை சேர்ந்த கண்ணராஜபாண்டி என்பது தெரியவந்தது.
மூவரிடமும் விசாரணை செய்தபோது மூவரும் மதுரை மாநகரில் தொடர்ந்து செயின் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது எனவே நேற்று மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 64 1/4 பவுன் தங்க நகைகளும் குற்றம் செய்ய பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டு மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மூவர் மீது மதுரை மாநகரில் 10 செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன.