கஞ்சா விற்பனை செய்ய முயன்ற ஐந்து நபர்கள் கைது!


மதுரை மாவட்டம்,மதுரை அவனியாபுரம் காவல் உதவி ஆய்வாளர் காசி ரோந்து பணியில் இருந்தபோது வெள்ளைக்கல் சந்திப்பில் பல்சர்( Pulsar) இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்தவர்களை போலிசார் கைது செய்தனர். 

 

மதுரை மாவட்டம்,மதுரை அவனியாபுரம் காவல் உதவி ஆய்வாளர் காசி ரோந்து பணியில் இருந்தபோது வெள்ளைக்கல் சந்திப்பில் பல்சர்( Pulsar) இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்தவரை விசாரணை செய்தபோது ஆனையூரைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவனியாபுரத்தைச் சேர்ந்த வீரமணி ஆகிய இருவரும் கஞ்சாவை மொத்தமாக விற்பனை செய்ய எடுத்து வந்ததாகவும், அதற்குமுன் மாதிரிக்காக 2 கிலோ கஞ்சாவை எடுத்து வந்ததாகவும் ஒப்புக்கொண்டனர்.

 

மேலும் விசாரணையில் வெள்ளைக்கல் அருகில் உள்ள அம்மன் கோவில் அருகில் காரில் வைத்து உத்தமபாளையத்தைச் சேர்ந்த மொக்கராஜ் @ மொக்கையன் 51/20, நாகராஜ் 31/20, கம்பத்தைச் சேர்ந்த அஜித்குமார் 21/20 கஞ்சா விற்பனை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. ஆகவே ஐந்து நபர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 24 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் இரண்டும், கார் ஒன்றும் மற்றும் கஞ்சா விற்பனை செய்த  ரூ.2,50,400/- பணமும் கைப்பற்றப்பட்டு அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.