ரூ.1,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; 2 பேர் கைது!


மும்பை துறைமுகத்தில் ரூ.1000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

நவி மும்பையில் உள்ள நவ சேவா துறைமுகத்தில், போதை பொருள் கடத்தப்பட்டுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் சுங்கத் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து வருவாய் புலனாய்வுத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 191 கிலோ அளவிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து சுங்கத்துறையினர் மற்றும் வருவாய் புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.1000 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான இருவரையும் 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.