பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை ஸ்லோ பாய்சன் எனப்படும் விஷத்தை நெடுநாட்கள் கொடுத்து நடிகை ரியா சக்ரபர்த்தி கொன்றுவிட்டதாக சுஷாந்தின் தந்தை கே.கே. சிங்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை ஸ்லோ பாய்சன் எனப்படும் விஷத்தை நெடுநாட்கள் கொடுத்து நடிகை ரியா சக்ரபர்த்தி கொன்றுவிட்டதாக சுஷாந்தின் தந்தை கே.கே. சிங்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
சுசாந்த் சிங் மரணம் தொடர்பாக அவருடைய காதலியும் நடிகையுமான ரியா மற்றும் அவரின் குடும்பத்தினா் மீது புகாா் தெரிவித்த சுசாந்த் சிங்கின் தந்தை இந்திரஜித், சுசாந்த் சிங்கின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 15 கோடி பணத்தை ரியா குடும்பத்தினா் தவறாக கையாண்டதாகவும் புகாா் தெரிவித்திருந்தாா். இந்தப் புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
சுசாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியா மீது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.
நடிகை ரியாவின் வாட்சப் உரையாடல்களில் எம்.டி.எம்.ஏ., மரிஜூவானா போன்ற வார்த்தைகள் அதிகம் இடம்பெற்றுள்ளது. இதனால் அவர் போதைப் பொருள்களைப் பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ரியாவின் வாட்சப் உரையாடல்கள் குறித்து விசாரணை செய்யும்படி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறை, நடிகை ரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ரியாவிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் பாலிவுட் திரையுலகினருக்குத் தொடர்பு உண்டா என விசாரணை நடத்தவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறை முடிவு செய்துள்ளது.