மதுரை அருகே இளைஞர் குத்திக் கொலை!


மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஆற்றுக்குச் சென்ற இளைஞரை பின்தொடர்ந்து வந்த கும்பல் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டித்துரை வயது 34. இவர் நேற்று இரவு வைகை ஆற்று பகுதிக்கு சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதில் பாண்டித்துரைக்கு வயிறு, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.

படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாண்டித்துரையை மீட்டு, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாண்டித்துரை பரிதாபமாக உயிரிழந்தார்.


இதுகுறித்து  துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ் சோழவந்தான், இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.