கடல் வழியே பயங்கரவாதிகள் இனி ஒருபோதும் ஊடுருவ முடியாது - ராஜ்நாத் சிங்

கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவும் சம்பவம் இனி ஒருபோதும் நடக்காது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


சென்னையில் நடைபெற்ற கடலோர காவல்படை விழாவில் பேசிய அவர், இந்திய கடல் சார் பாதுகாப்பில் கடலோர காவல்படை முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். சமீபத்தில் மகாராஷ்ட்ரா, கர்நாடகம், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது கடலோர காவல்படை 4000 பேரை பத்திரமாக மீட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.


2008 ஆம் ஆண்டில் கடல் வழியே ஊடுருவி மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை நினைவு கூர்ந்த அவர், அது போல இனி ஒருபோதும் பயங்கரவாதிகள் கடல் வழி ஊடுருவும் சம்பவம் நடக்க மத்திய அரசு அனுமதிக்காது என்றார்.


கடல் சார் பாதுகாப்பில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அக்கறை காட்டப்படுவதாக அவர் கூறினார். முன்னதாக சென்னை வந்த ராஜ்நாத் சிங்கை, விமானநிலையத்தில் தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின் ஆகியோர் வரவேற்றனர்.