இஸ்லாமியர்களை பற்றி தான் தவறாக பேசியதாக அவதூறு பரப்பப்படுகிறது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்

இஸ்லாமியர்களை பற்றி தான் தவறாக பேசியதாக பரப்பப்படும் தகவல்கள் உண்மையில்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கமளித்துள்ளார்.



நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கருவேலங்குளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன் மீது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் அவதூறு பரப்புவதாக தனக்கு தகவல்கள் வருவதாக தெரிவித்தார்.


இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அதிமுகவுக்கு வாக்களிக்க தயாரானதால், அதனை தடுக்கும் நோக்கில் திமுக திட்டமிட்டு அரசியல் நாடகம் நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.