சென்னை
தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகளும், 125 நகராட்சிகளும், 529 பேரூராட்சிகளும் உள்ளன. இதன் கவுன்சிலர்களே மேயர் நகராட்சி சேர்மன் மற்றும் பேரூராட்சி தலைவர்களை கவுன்சிலர்களே தேர்வு செய்வார்கள். இதேபோல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களும் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.
,
இதைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர், நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களின் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என அதிமுக அறிவித்து உள்ளது. அதிமுக பொதுக்குழு முடிந்தவுடன் விண்ணப்ப கட்டண தொகைக்கான அசல் ரசீதுடன் வரும் 25ஆம் தேதி முதல் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். வரும் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அதிமுக தலைமையகத்திற்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமைக்கழகம் அறிவித்து உள்ளது.