மகாராஷ்டிரா விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் 2ஆவது நாள் விசாரணை தொடங்கியது

உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது


மகாராஷ்டிரா விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் 2ஆவது நாள் விசாரணை தொடங்கியது


பாஜக ஆட்சியமைக்க மகாராஷ்டிர ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்



பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் கடிதங்களும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்


தேசியவாத காங். எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் என அஜித்பவார் ஆளுநரிடம் அளித்திருந்த கடிதங்களும் தாக்கல்


நேற்று நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசுக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் நோட்டீஸ்


பாஜக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதத்தை இன்று சமர்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்


சிவசேனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், காங்கிரஸ்-தேசியவாத காங். தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிசேக் சிங்வி ஆஜர்


பாஜக தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜர்


மகாராஷ்ர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது


உச்சநீதிமன்றம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த ஆவணங்களை தாக்கல் செய்தார் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா