“மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்து பழிவாங்கவில்லை”: அமைச்சர் விஜயபாஸ்கர்

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை தண்டிக்கும் விதமாக பணியிட மாறுதல் செய்யவில்லை என சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.



 


முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிகளுக்கான அட்டை வழங்கும் நிகழ்ச்சி சென்னை சாந்தோமில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் மேலும் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க விண்ணப்பித்துள்ளதாக கூறினார். 



போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் நிர்வாக ரீதியாகவே பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், அவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் பணிமாறுதல் செய்யவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.