4 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை, தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களிலுள்ள நீர்நிலைகள், நீர் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து 12 வாரங்களுக்குள் அகற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.



இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதன் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பளித்தது. அதில் 4 மாவட்டங்களிலுள்ள நீர்நிலைகள், நீர் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து நோட்டீஸ் வழங்கி அகற்ற உத்தரவிட்டது.