அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களுக்கு 8 மணி நேரம் பணியை அமல்படுத்த உரிய நடைமுறை உருவாக்கப்படும் என தமிழக மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவாதம் அளித்துள்ளது.
மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு, 8 மணி நேர பணி நேரம் நிர்ணயித்து தமிழக அரசு 2015ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ரவீந்திரநாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதன் மீதான விசாரணையில், மருத்துவக் கல்வி இயக்குனரக துணை இயக்குனர் இந்துமதி ஆஜராகி, அரசு உத்தரவை அமல்படுத்த நடைமுறை உருவாக்கப்படும் என்றார்.
இதை பதிவு செய்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 17ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.