காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு தொடர்ந்து திருப்திகரமாகவே இருப்பதாக காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரி ஒழுங்காற்று குழுவின் 20வது கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் டெல்லியில் உள்ள சேனா பவனில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, புதுவை மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வுக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நவீன் குமார், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள 8 அணைகளின் நீர்வரத்து குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு இதுவரை திருப்திகரமாகவே உள்ளதாகவும் தெரிவித்தார்.