திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குதிரையாறு, பாலாறு பொருந்தலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பழனி வட்டார விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பொருந்தலாறு அணையின் பழைய ஆறு அணைக்கட்டுகளில் இருந்து நவம்பர் 18 முதல் 130 நாட்களுக்கு 144 புள்ளி 52 மில்லியன் கனஅடியும், குதிரையாறு அணையில் இருந்து நாகன்வலசு இடது பிரதான கால்வாயில் 56 புள்ளி 31 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பொருந்தலாறு அணை திறப்பால், ஆறாயிரத்து 168 ஏக்கர் நிலங்களும், குதிரையாறு அணை திறப்பால் சுமார் 700 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும் என்றும் திறக்கப்படும் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.