உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால்தான்,நிலுவைத் தொகையிலிருந்து தொலைத்தொடர்பு அல்லாத நிறுவனங்கள் சலுகை பெறமுடியும்

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால்தான்,தோராய வருவாய் நிலுவைத் தொகையிலிருந்து தொலைத்தொடர்பு அல்லாத நிறுவனங்கள் சலுகை பெறமுடியும் என தொலைத்தொடர்புத்துறை கூறியுள்ளது.



கெயில் இந்தியா நிறுவனத்திற்கு, ஐ.பி-1((IP-1)), ஐ.பி-2((IP-2)) உரிமங்கள், ஐஎஸ்பி((ISP)) எனப்படும் இண்டர்நெட் சேவைக்கான உரிமம் ஆகியவற்றை தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது.


இதற்கான ஏஜிஆர் நிலுவைத் தொகை, ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 655 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த மாதம் கடிதம் அனுப்பியது. ஆனால் நிலுவைத் தொகை ஏதுமில்லை என கெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


நீண்ட தூர இண்டர்நெட் உரிமத்திற்கான ஏஜிஆர் நிலுவைத் தொகையான ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயை பவர்கிரிட்((PowerGrid)) செலுத்த வேண்டும் என தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. ஆனால், இதனையும் பவர்கிரிட் மறுத்திருக்கிறது.