புதுடெல்லி,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன. இந்நிலையில், இந்த பிரசாரத்துக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக பா.ஜனதா நேற்று ஆலோசனை நடத்தியது.
கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமை தாங்கினார். மத்திய மந்திரிகள் கிரன் ரிஜிஜு, முக்தார் அப்பாஸ் நக்வி, பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், அனுராக் தாக்குர், அர்ஜுன் ராம் மெக்வால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.