டெல்லி கிரிக்கெட் சங்க ஆண்டு பொதுக்கூட்டத்தில் மோதல் ஏற்பட்டு நிர்வாகிகள் ஒருவொருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் நடந்த இக்கூட்டத்தில், ஓய்வு பெற்ற இயக்குநர்களை மீண்டும் நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு புதிய தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நிர்வாகிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட நிர்வாகிகளுக்கு வாழ்நாள் தடை விதித்து, டெல்லி கிரிக்கெட் சங்கம் உடனடியாக கலைக்கப்படவேண்டும் என பாஜக எம்.பி, கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.