டெல்லியில் நிலவும் கடும் குளிரால் பொதுமக்கள் அவதி

டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.



டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. சப்தார்ஜங் பகுதியில், நேற்று காலை நிலவரப்படி, தட்ப வெப்பநிலை, 2.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்ததால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.


கடும் குளிர் காரணமாக, டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை, எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி, குறைவான வேகத்திலேயே சென்றன.


30க்கும் மேற்பட்ட ரயில்கள், தாமதமாக இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. விமான ஓடுதளம் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவியதால், 3 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.