குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து வதந்தி கிளப்புவர்கள் கொலைகாரர்களுக்கு சமமானவர்கள் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் நடைபெற்ற தமிழரசன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை திமுகவும் காங்கிரசும் ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டினார்.
அசாமில் நடக்க கூடிய பிரச்சனையும் இலங்கை தமிழர் பிரச்சனையும் வெவ்வேறு என்றும், அதனை சிலர் முடிச்சு போடப்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.