நித்யானந்தா கோழை மாதிரி ஒளிந்து கொண்டுள்ளார் - ராமானுஜ ஜீயர்

நித்யானந்தா கோழை மாதிரி ஒளிந்து கொண்டிருப்பதாக, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.



ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நித்யானந்தா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு பதிலளித்த ஜீயர், தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்கும் நித்யானந்தா அதனை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். மாறாக ஓடி ஒளிந்துகொண்டு நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்காமல் இருப்பதாக தெரிவித்தார்.