ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் இருந்து விலக்கப்பட இருக்கிறது. கடைசி லாட்டிற்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.இந்தியாவின் சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஏத்தர் 450 மாடலானது வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற சிறந்த மாடலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வருகையால் ஏத்தர் 450 ஸ்கூட்டருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.