கடந்த சில நாட்களாக தங்கள் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மாற்றம், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 18 குறைந்து ரூ.3764க்கும், பவுன் ரூ.144 ரூபாய் குறைந்து ரூ30112க்கும் விற்பனையாகிறது.
சுத்த தங்கமான 24 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.31624 க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் 30 காசுகள் குறைந்து ரூ.49.70க்கு விற்பனையாகிறது.