வரலாற்றுச் சிறப்புமிக்க போடோ உடன்பாடு


வரலாற்றுச் சிறப்புமிக்க போடோ உடன்பாட்டுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ள பிரதமர்  நரேந்திர மோடி, இந்த உடன்பாடு போடோ மக்களின் வாழ்க்கை மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.


     “அமைதிக்கான புதிய விடியலுக்கும், இணக்கத்திற்கும், ஒற்றுமைக்கும் இது வழிகாட்டும்! இன்றைய நாள் இந்தியாவிற்கு மிகச்சிறப்பான நாள். போடோ குழுக்களுடன் இன்று கையெழுத்திடப்பட்டுள்ள உடன்பாடு  போடோ மக்களின் வாழ்க்கை மாற்றத்திற்கு வழிவகுக்கும்.  


     பல காரணங்களுக்காக இன்று கையெழுத்திடப்பட்ட உடன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. முன்னணி பாத்திரம் வகிப்பவர்களை இது வெற்றிகரமாக ஒரே கட்டமைப்புக்குள் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே ஆயுதம் தாங்கிய எதிர்ப்புக் குழுக்களோடு, இணைந்திருந்தவர்கள் தற்போது மைய நீரோட்டத்திற்கு வந்துள்ளனர். இது தேசத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்பு செய்யும்.


     போடோ குழுக்களுடனான உடன்பாடு போடோ மக்களின் தனித்துவமான கலாச்சாரத்தை மேலும் பாதுகாத்து பிரபலப்படுத்தும். இவர்கள், விரிவான வளர்ச்சி சார்ந்த முன்முயற்சிகளின் பயன்களைப் பெறுவார்கள்.  போடோ மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற சாத்தியமான அனைத்தையும் செய்வதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று பிரதமர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.