தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தேசப்பிதா மகாத்மாகாந்தி அமரத்துவம் எய்திய நாளில் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். மகாத்மாவின் ஆளுமை, கருத்துகள் மற்றும் கொள்கைகள், வலிமையான, திறமையான மற்றும் வளம் மிகுந்த புதிய இந்தியாவைப் படைக்க நமக்கு தொடர்ந்து வழிகாட்டும்” என்று தெரிவித்துள்ளார்.