பாரம்பரிய கிராமியக் கலையான இரணியன் தெருக்கூத்து


கோவை .


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம்,சிறுமுகை அருகே உள்ள வெள்ளிக்குப்பம்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் தெருக்கூத்து எனப்படும் பக்த பிரகலாதா எனும் 'இரணிய நாடகம்'  இரவு தொடங்கி காலை வரை சிறப்பாக நடைபெற்றது...


நாடகத்தில் ஊர் பொதுமக்கள் சிறுவர்கள் இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவரும் வேடமிட்டு நடித்தனர்.. நாடகத்தினை ஊர் பொதுமக்கள் மற்றும் அக்கம் பக்கத்து ஊரில் உள்ள பொதுமக்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் கண்டுகளித்தனர்..


இவ்வூர் பொதுமக்கள் பாரம்பரிய கிராமியக் கலையான இரணியன்  தெருக்கூத்து  நாடகத்தை அழியாமல் வருடம் தோறும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.