மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வயது வந்தோருக்கான சுயவேலைவாய்ப்பு பயிற்சி


மதுரை காமராசர் பல்கலைக்கழக வயது வந்தோர் தொடர் கல்வி மற்றும் விரிவுப்பணித்துறையில் மூவகைப் பயிற்சி 24.01.2020 முதல் தொடங்கவுள்ளது.


பெண்களுக்கான அழகுகலைப் பயிற்சி 45 நாட்களும், அலங்கார ஆபரணங்கள் தயாரித்தல் பயிற்சி ஒரு மாத காலமும் நடத்தப்படும்.


ஆண், பெண் இருபாலருக்கான தொழில்துறை எலக்ட்ரிஷியன் பயிற்சி ஒரு மாத காலமும் நடத்தப்படும்.


இப்பயிற்சியில் 10 ஆம் வகுப்பு தேறியவர்கள் / தவறியவர்கள் மற்றும் மேலும் படித்த ஆர்வமுள்ள அனைவரும் சேரலாம். இதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. சேர்க்கையும் தொடங்கப்பட்டுள்ளது.


பயிற்சிகள் முழுவதும் செய்முறை வாயிலாக நடத்தப்படும்.


பயிற்சி முடித்த மாணவ-மாணவியருக்கு பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும்.


விண்ணப்பம் பெற அணுக வேண்டிய முகவரி


திட்ட அலுவலர் (பொறுப்பு), 


வயதுவந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப்பணித்துறை,


மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,


அழகர்கோவில் சாலை, மதுரை - 625 002 


தொலைபேசி எண் – (0452) 2537838


 


மதுரை காமராசர் பல்கலைக்கழக வயதுவந்தோர் தொடர் கல்வி மற்றும் விரிவுப் பணித்துறை செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.