மிக அதிக அளவில் மின் வளங்கள் பயன்படுத்தியதற்கான அங்கீகார சான்றிழை ஸ்பிரிங்கர் நேச்சர் வெளியீட்டாளர் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் எம். கிருஷ்ணன் அவர்களிடம் வழங்கியது. உடன் திரு.ரஜினிஷ், பால் ராஜ்குமார், டாக்டர் பா. சுரேஷ், பல்கலைக்கழக நூலகர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிராந்தியத்தில் மிக அதிக அளவில் மின் வளங்கள் பயன்படுத்தியதற்கான அங்கீகார சான்றிழை ஸ்பிரிங்கர் நேச்சர் வெளியீட்டாளர் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் எம். கிருஷ்ணன் அவர்களிடம் வழங்கியது.
மதுரை பல்கலைக்கழக நூலகம் அங்குள்ள மின்வளங்களைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் நடத்தி மின்வளங்களை அதிக அளவில் பதிவிறக்கம் செய்ய உதவுகிறது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஈ-ஷோத் சிந்து (இஎஸ்எஸ்) தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச வெளியீட்டாளர்களால் வழங்கப்பட்ட மின் இதழ்களை எளிய முறையில் பதிவிறக்கம் செய்ய வழி வகை செய்யப்பட்டுஉள்ளது. தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சுமார் 7000 த்திற்கும் மேற்பட்ட ஸ்பிரிங்கர் நேச்சர் மின் புத்தகங்கள், மற்றும் மின் இதழ்கள் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யபட்டதற்காக 2019 ஆம் ஆண்டின் அங்கீகார சான்றிதழை ஸ்பிரிங்கர் நேச்சர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியுள்ளது.