பத்துமலை முருகனுக்கு அரோகரா..!! மலேசியாவில் தைப்பூசத்திருவிழா கொண்டாட்டம்
தைப்பூச திருநாளை முன்னிட்டு, மலேசியாவில் லட்சக்கணக்கான தமிழர்கள், பத்துமலை முருகன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப் பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.தைப்பூச விழா மிகவும் தொன்மை வாய்ந்தது. இதனை 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.
தை மாதத்தில் பூச நட்சத்திரமும், முழுநிலவு நாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூச திருவிழாவாகும். இந்தாண்டு தைப் பூசம் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டது.