சென்னை விமான நிலையத்தில் 1.16 கி.கி தங்கம் சுங்கத் துறையினரால் பறிமுதல் – ஒருவர் கைது!


ரியாத்திலிருந்து ஷார்ஜா வழியாக ஏர் அரேபியா விமானம் மூலம் சனிக்கிழமை காலை சென்னை வந்த ஆந்திராவின் ராயசோட்டியைச் சேர்ந்த முகமதுகான் பதான் (41) என்பவர் தங்கத்தை எடுத்து வருவதான சந்தேகத்தின் பேரில் வெளியேறும் வழியில் இடைமறித்து சோதனை செய்யப்பட்டார்.  அவரது உடைமைகளை சோதித்தபோது, அதில் இறைச்சி வெட்டும் கத்தியின் உறைக்குள் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது  கண்டுபிடிக்கப்பட்டது.  அதனை உடைத்து பார்த்தபோது, செவ்வக வடிவிலான தங்கக்கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 24 கேரட் தங்கத்தின் எடை 1.164 கிலோகிராம் என்றும், மதிப்பு ரூ. 49.03 லட்சம் என்றும் தங்க மதிப்பீட்டாளர் சான்றிதழ் அளித்தார்.  சுங்கச்சட்டம் 1962-ன் படி, தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தப் பயணி கைது செய்யப்பட்டார்.


இது குறித்து, மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.