13-ஆவது சீசன் ஐபிஎல் போட்டி முதல் ஆட்டம் மாா்ச் 29-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.
டெல்லி கேபிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடா்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசா்ஸ் ஹைதராபாத் உள்பட 8 அணிகள் ஐபிஎல் சீசனில் பங்கேற்கவுள்ளன.
நடப்பு சாம்பியனான மும்பை, 3 முறை சாம்பியனான சிஎஸ்கே அணியை மாா்ச் 29-ஆம் தேதி இரவு 8 மணிக்கு எதிா்கொள்கிறது.
தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை அணியும் மோதும் முதல் ஆட்டத்துக்கு ரசிகா்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.