பாரதபிரதமர் 15 அம்ச திட்டங்கள் - பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்


 பாரதபிரதமர் புதிய 15 அம்ச திட்டங்கள் மற்றும் பிரதான் மந்திரி
ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்  தேசிய
சிறுபாண்மையின ஆணைய துணைத்தலைவர் ஜார்ஜ்குரியன் தலைமையில்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாரதப்பிரதமர் சிறுபான்மையினர் நலனுக்கான
அறிவித்து செயல்படுத்திவரும் புதிய 15 அம்ச திட்டங்களான ஒருங்கிணைந்த குழந்தை
வளர்ச்சித்திட்டத்தின் சேவைகள் சீராக கிடைக்கச்செய்தல், பள்ளிக்கல்வியை பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்தல், உருது மொழி கற்பிப்பதற்கான வசதியை ஏற்படுத்துதல், மதராஸா முறைக் கல்வியை நவீனப்படுத்துதல், சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், மௌலானா ஆசாத் கல்வி அமைப்பின் மூலம் கல்விக்கூடங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், சுய வேலைவாய்ப்பு மற்றும் எளியவர்களுக்கான கூலிக்கு வேலைத்திட்டம், தொழில்நுட்ப பயிற்சியின் மூலம் திறனை மேம்படுத்துதல், பொருளாதார நடவடிக்கைகளுக்கான கடனுதவி அதிகரிக்கச்செய்தல், மாநில
மற்றும் மத்திய அரசுபணிகளில் வேலைவாய்ப்பு, ஊரக வீட்டுவசதித்திட்டத்தில் பங்கு,
சிறுபான்மையினத்தவர் வாழும் குடிசைப்பகுதிகளின் நிலையை மேம்படுத்துததல்,
இனக்கலவரங்களை தடுக்க நடவடிக்கை எடுத்தல், இனக்கலவரத்திற்கான தண்டனை, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டம் குறித்தும் மாண்புமிகு தேசிய சிறுபான்மையின ஆணைய துணைத்தலைவர் விரிவாக ஆய்வு செய்தார்கள.மேலும், கரூர் மாவட்டத்தில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்த துணைத்தலைவர் இஸ்லாம் மற்றும் கிறித்தவ அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் மேற்சொன்ன திட்டங்களால்பயனடைந்தோர் விபரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.அதனைத்தொடர்ந்து இஸ்லாம் மற்றும் கிறித்தவ அமைப்புகளின் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கேட்ட மாண்மிகு துணைத்தலைவர்  கோரிக்கைகளின் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், மத்திய அரசின் மூலம் மாண்புமிகு பாரதப்பிரதமர்  சிறுபான்மையின மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள், அந்த திட்டங்கள் குறித்து நீங்கள் அனைவரும் தெரிந்துகொண்டு அனைத்து சிறுபான்மையின மக்களிடமும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களையும் இத்திட்டங்கள் மூலமாக பயன்பெறச்செய்ய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.


 இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் இராஜேந்திரன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரெங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.