தில்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சூழ்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார்.
“தில்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவுகின்ற சூழ்நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டேன். அமைதியையும், இயல்பு நிலையையும் உறுதி செய்ய காவல்துறையும், இதர முகமைகளும் களத்தில் பணியாற்றி வருகின்றன.
அமைதியும், நல்லிணக்கமும் நமது பண்பாட்டின் மையமாகும். எல்லா நேரத்திலும் அமைதியையும், சகோதரத்துவத்தையும் பராமரிக்குமாறு தில்லியைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அமைதியையும், இயல்பு நிலையையும் கூடிய விரைவில் நிலை நிறுத்துவது மிகவும் முக்கியமாகும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.