மதுரையில் சிறார் ஆபாசப் படங்களைப் பார்த்துப் பரப்பிய மூவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது!



மதுரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு புகார் கடிதம் வந்துள்ளது.



அதில், "மதுரை ஆரப்பாளையம் சண்முகநாதபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த நாராயணசாமி மகன் குமார் (40) தனது மொபைல் போனில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்த்து வருகிறார்.


அந்த நபர், 'தேசிய குழந்தைகளுக்கு எதிரான சுரண்டல் மற்றும் காணாமல் போனவர்கள் விவரங்கள் சேகரிப்பு அமைப்பு' என்ற பெயரில் போலியாக இயங்கிவந்த ஓர் அமைப்பினால் குழந்தைகளை ஈடுபடுத்தி எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்திருக்கிறார்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.




இந்தப் புகாரின் அடிப்படையில் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் செல்வகுமாரி விசாரணை நடத்தினார்.


இதில் குமார் தனது மொபைல் போனில் ஓராண்டுக்கும் மேலாக குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்த்துள்ளதும், அவற்றை முகநூலில் பிறருக்கு பகிர்ந்து வந்ததும் உறுதியானது.


இது தொடர்பாக எஸ்ஐ செல்வகுமாரி கொடுத்த புகாரின்பேரில், மதுரை, தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், குமார் மீது ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


அவரைத் தவிர செந்தில்குமார் (31), சுந்தரபாண்டியன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.சிறாற் ஆபாச படங்கள் பார்த்ததாக 2 நாட்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.