ஆசிய மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுனில் குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதனையடுத்து 87 கிலோ எடைப்பிரிவில் 27 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியா தங்கம் வென்றுள்ளது.
டெல்லியில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 87 கிலோ கிரீக்கோ-ரோமன் எடைப்பிரிவில் கிரிகிஸ்தான் வீரர் ஆசாத் சாலிடினோவுடன் பலப்பரீட்சை செய்தார் சுனில் குமார். இதில் 5-0 என்ற புள்ளிகணக்கில் தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார் இந்திய வீரர் சுனில் குமார்.