திருப்பூர் வளர்ந்து வரும் தொழில் நகரத்தில் சென்னை கோவை ஆகிய மாவட்டங்களை விட அடுத்தபடியாக திருப்பூர் உள்ளது காரணம் பணியன் தொழில் அன்னிய செலவாணியில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டி தருகின்ற நகரமாக விளங்கி கொண்டிருக்கிறது. காரணம் வெளி மாநில, மாவட்ட தொழிலாளர்கள் இங்கு அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.
அதற்கேற்பால் போல் வாகண நெறிசலும் உண்டு இந்திய வரைபடத்தில் குட்டி ஜப்பான் என்று அலைக்கப்படும் டாலர் சிட்டி திருப்பூர் ஜொலித்து வருகிறது.
திருப்பூரில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற பெயர் பலகை எங்கும் காண முடிந்தது ஆனால் கடந்த நான்கு மாத காலமாக ஆட்கள் தேவை என்ற பெயர் பலகைகளை காண முடிய வில்லை, வீடுகள் காலியாக உள்ளது என விளம்பரம் பலகை அதிகமாக உள்ளது காரணம் ஜி எஸ் டி வந்த முதல் சிறு குறு தொழில் முடங்கி விட்டது பணியன் உரிமையாளர்கள் கம்பெனிகளை விற்பனை செய்தவன்னமே உள்ளனர். தொழிலாளர்கள் திருப்பூரை விட்டு சொந்த ஊருக்கே ஓடி விட்டனர் வாரம் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி தொழிலாளர்கள் தற்போது 2 ஆயிரம் வாங்கும் சூழ்நிலையில் உள்ளனர். இவர் வாங்கும் சம்பளம் வீட்டு வாடகை வீட்டு உபயோக பொருட்கள் குழந்தைகள் படிப்பு செலவு வாகன செலவு போன்ற செலவுக்கே பற்றாமல் தினறி வருகின்றனர்.
முதலாளிகள் எல்லாம் தற்போது தொழிலாளிகளாக மாறி வரும் நிலையில்
மற்ற மாவட்டங்களில் மாத சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால் திருப்பூரில் மட்டும் தான் வார சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு சில காவல் துறையினர் வசூல் வேட்டையில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக வாகண தனிக்கை என்ற போர்வையில் கெல்மெட் , வாகன உரிமம் ஓட்டுனர் உரிமம் என சிறிய தொகை அபராதம் செலுத்தினாலும் குறிப்பாக குடிபோதையில் வாகன ஓட்டினால் ரூபாய் 10 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை பகிரங்கமாக வசூல் செய்து வருகின்றனர். இந்த காவல்துறையினர் பகலில் வாகண தனிக்கை வசூலிலும் இரவில் குடிபோதையில் வரும் குடிமகன்களை குறிவைத்து டாஸ்மாக் பார்களின் அருகாமையில் நின்று வலை வீசி பிடித்து அபராதம் விதிக்கின்றனர் .
இது ஒரு புறம் இருக்க பார் உரிமையாளர்கள் பார் அருகாமையிலேயே நின்று போலிஸார் வாகணங்களை பிடிப்பதால் வருமாணம் குறைகிறது என்று புலம்பி தவிக்கின்றனர்.பொதுமக்களுக்கும் மதுபிரியர்களுக்கும் வருடத்திற்க்கு ஒரு முறை தான் தீபாவளி பண்டிகை வருகிறது ஆனால் காவல்துறைக்கு வாரம் வாரம்
சனி ஞாயிற்று கிழமை வந்தால் தீபாவளி தான்குறிப்பாக என்னவென்றால் மேல் மட்ட காவல் துறை அதிகாரிகள் தினமும் கெல்மெட் அபராதம் , மது அபராதம் என பல்வேறு கட்டுபாடுகள் விதிப்பதால் மற்ற காவல் துறை அதிகாரிகள் அதை பின்பற்றுகின்றனர். காவல் துறையினர் மேல் அதிகாரிகள் கொடுக்கின்ற அலுத்ததினால் இப்படி செயல் படுகின்றனர்.மேலும் திருப்பூரில் நடக்கும் ஆர்பாட்டம் சாலை மறியல் ஆகிய போராட்டங்களுக்கு வெயிலிலும் மலையிலும் பாதுகாப்பு அளித்தாலும் இது இங்குமட்டும் அல்ல திருப்பூர் மாவட்ட மாநகர பகுதிகளில் தொடர் கதையாகஇருந்துவருகின்றது.
பொது மக்களும் வாகன ஓட்டிகளும் கடன் வாங்கி போலிஸாருக்கு அபராதம் செலுத்தி சகிப்பு தன்மையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க,
டாஸ்மாக் மாவட்ட மேளாலர் அரசு அனுமதி நேரத்தை மீறி மது விற்பவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை அதே போன்று அரசு விடுமுறை நாட்களில் சட்டத்தை மீறி மது விற்பவர்கள் மீது நடவடக்கையில் இல்லை அந்த பக்கம் டாஸ்மாக் மேளாலர் எட்டி கூட பார்ப்பது இல்லை ? மாநகர துணை போலிஸ் கமிஷ்னர் பத்திரிநாராயணன் பொறுயேற்ற நான்கு மாதங்களில் கள்ள லாட்டரி விற்பனை , கஞ்சா விற்பனை , விபச்சாரம் செய்பவர்களை விரட்டி அடித்த பத்திரி நாராயனுக்கு தனி நற்பெயரும் பொது மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் அதிகாலை மது விற்பனை இரவு நேர மது விற்பனையும் எப்படி என பொது மக்களுக்கு இடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது ?
மது போதையில் வரும் வாகன ஓட்டிகளிடம் அவரவர்களுக்கு ஏற்பால் போல (அதாவது வாகணத்தின் மதிப்புக்கு ஏற்ப )ஏற்ற இறக்கம் போல அபராதம் வசூலிக்கின்றனர்.
கெல்மெட் , ஓட்டுனர் உரிமம் . மது போதையில் வாகனம் ஓட்டுவது என சரிபார்த்து அபராதம் விதிக்கும் போலிஸார் அரசு அனுமதி இல்லாத நேரத்தில் மது விற்பனை செய்பவர்களை ஏன் கண்டு கொள்ளாமல் இருப்பது பொது மக்களுக்கு இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே தவர் இலைக்கும் அதிகாரிகள் மீதும் கள்ள மது விற்பனை செய்பவர்கள் மீதும் மாநகர போலீஸ் துணை கமிஷ்னர் பத்திரி நாராயணன் அவர்கள் சாட்டையை சுழற்ற பட வேண்டும் என பொதுமக்களுக்கிடையே கோரிக்கை எழுந்துள்ளது.