3,350 டன் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு,நாட்டின் கையிருப்புத் தங்கத்தின் அளவை விட இது 5 மடங்கு அதிகம்!


உத்தரப்பிரதேசத்தின் இரு இடங்களில் 3,350 டன் தங்கச் சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கையிருப்புத் தங்கத்தின் அளவை விட இது 5 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


சோன்பத்ரா மற்றும் ஹர்தி ஆகிய இடங்களில் தங்கச் சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சோன்பத்ராவில் 2,700 டன் மற்றும் ஹர்தியில் 650 டன் என மொத்தம் 3,350 டன் தங்கம் இருக்க வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.


இதன் மதிப்பு ரூ.12 லட்சம் கோடிவரை இருக்கும் எனத் தெரிகிறது. இது இந்தியாவின் மொத்த கையிருப்புத் தங்கத்தின் அளவை விட ஐந்து மடங்கு அதிகமாகும். ஆக இந்த மதிப்புமிக்க தங்க சுரங்கத்தை ஏலம் விட அரசு முடிவு செய்துள்ளது. இந்த சுரங்கத்தில் தங்கம் மட்டும் அல்லாது யுரேனியம் போன்ற அரிய தாதுக்கள் உள்ளன என்றும் ராய் தெரிவித்துள்ளார். மேலும் தங்கத்தை தவிர இப்பகுதியில் யுரேனியம் போன்ற அரிய தாதுக்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். உத்திரபிரதேசத்தின் புண்டேல்கண்ட் மற்றும் விந்தியன் மாவட்டங்களில் தங்கம், வைரம், பிளாட்டினம், சுண்ணாம்பு, கிரானைட், பாஸ்பேட், குவார்ட்ஸ் மற்றும் சீனா களிமண் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.


மற்ற நாடுகளில் தங்கம் இருப்பு இந்த நிலையில் உலக தங்கக் கூட்டமைப்பின் படி இந்தியாவிடம் தற்போது 626 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. இது உலகளவு தங்கத்தின் அளவில் 6.6% ஆகும். மேலும் இந்த அறிக்கையின் படி அதிகபட்சமாக அமெரிக்காவிடம் 8,133.5 டன் தங்கம் உள்ளது.


அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனியிடம் 3,366 டன், இத்தாலியிடம் 2,451.8 டன், பிரான்ஸிடம் 2,436 டன் கையிருப்பு உள்ளது. தற்போது மதிப்பிடப்பட்டுள்ள தங்கம் மட்டும் கிடைக்குமாயின், உலகிலேயே மூன்றாவது இடத்துக்கு முன்னேறும்.