அய்யா பகவான் வைகுண்டசாமி பிறந்தநாள் விழா முன்னிட்டு மார்ச் 3ல் உள்ளூா் விடுமுறை!


கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித் தோப்பு அய்யா பகவான் வைகுண்டசாமி
பிறந்தநாள் விழா 03.03.2020 செவ்வாய்க் கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளதால் பொதுத் தேர்வு
எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுககு; இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும் மேற்படி 03.03.2020 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 21.03.2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.