சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குக் காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தேர்தலில் தேவி மாங்குடி மற்றும் பிரியதர்ஷினி அய்யப்பன் வெற்றிபெற்றதாக 2 வெற்றிச் சான்றிதழ்கள் தனித்தனியாக வழங்கப்பட்டன.
அதிகாரிகள் செய்த தவற்றால் தேர்தல் முடிவு அன்று குழப்பம் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் தேவி மாங்குடி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பிரிதர்ஷினி அய்யப்பன் பதவி ஏற்பதைத் தடை செய்ய வேண்டும் என மனு அளித்திருந்தார்.
இந்த மனு தொடர்ந்து விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பொறுப்பேற்க இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது,
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் ஆகியோர்கள் அடங்கிய அமர்வு, "சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் இருவருக்கு வெற்றிச் சான்று வழங்கப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் தேவி மாங்குடி வெற்றி பெற்றதுதான் செல்லும். அ.தி.மு.க, ஆதரவாளர் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது.