சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை தணிக்கை செய்வதற்கான உச்சவரம்பு 5 மடங்கு உயர்வு


சிறு வியாபாரிகள், வணிகர்கள் போன்றவர்களின் சுமையைக் குறைப்பதற்காக, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை  தணிக்கை செய்வதற்கான உச்சவரம்பு ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உச்சவரம்பு தற்போதுள்ள ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசுகையில் அறிவித்தார்.


குறைவாக பணம் புழங்கும் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும் நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்ட உச்சவரம்பானது, தமது வர்த்தகப் பரிவர்த்தனைகளில் 5 விழுக்காட்டிற்கும் குறைவான அளவில், ரொக்கப் பணத்தை பயன்படுத்துவோருக்கு மட்டுமே பொருந்தும்.