டாக்டர் ராமதாஸ் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கண்டனம்


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டிருப்பதை உறுதி செய்து, புதிய தேர்வுப் பட்டியலை 2 வாரங்களுக்குள் தயாரித்து வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் இதுவரை செயல்படுத்தவில்லை. மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாரியம் தீர்மானித்திருப்பது கண்டிக்கத்தக்கது என டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


உயர்நீதிமன்றமே ஆணையிட்டும், அதை செயல்படுத்த தேர்வு வாரியம் மறுப்பதால் அதன் நோக்கத்தை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. வாரியத்தின் இந்த நிலைப்பாடு தமிழகத்தில் சமூகநீதியை காப்பதில் ஈடு செய்ய முடியாத சீரழிவை ஏற்படுத்தி விடும்.


எனவே, இந்த விஷயத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் அதன் பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் வேதியியல் மற்றும் பிற பாடங்களுக்கு புதிய ஆசிரியர் தேர்வு பட்டியலை தயாரித்து வெளியிட வேண்டும். இவ்வாறு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்