சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை புதிதாக அமைக்கப்படும், இந்த பகுதியில் உள்கட்டமைப்பு வசதி அதிகமாக மேம்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மேலும் சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் விரைவில் அறிமுகம்.
சென்னை பெங்களூர் இடையே அமைக்கப்படும் இந்த சாலை வர்த்தக வழித்தடமாக் இருக்கும். இந்த சாலை இருக்கும் பகுதியில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும். டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் 2023க்குள் முடிக்கப்படும், என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சென்னை – பெங்களூர் இடையே போக்குவரத்து மிகவும் எளிதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை பெங்களூரு இடையே இந்த எக்ஸ்பிரஸ் சாலை அமைய உள்ளது. இது 265 கிலோ மீட்டர் தூரம் ஆகும். பெங்களூரு ஒசகோட்டையில் இருந்து தொடங்கி கர்நாடகத்தில் கோலார் ஆந்திராவில் சித்தூர் தமிழகத்தில் வேலூர் வாலாஜாபேட்டை வழியாக ஸ்ரீபெரும்புத்தூரில் இணைகிறது. இந்த சாலை அமைக்கப்படுவதின் மூலம் வாகனங்கள் ஆம்பூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி என சுற்றிச்செல்வது தவிர்க்கப்பட்டு நேரடியாக சித்தூர் கோலார் வழியாக பெங்களூர் சென்று அடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சென்னைக்கு சில மணி நேரத்தில் செல்ல முடியும்.