பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பால் பொற்கால தமிழகத்தை செதுக்கும் முதல்வர்!

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததன் மூலம் பொற்கால தமிழகத்தை செதுக்கும் சாமானியராக திகழ்கிறார் என்று ஜெ. பேரவை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது,
ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற பேரவை கூட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்து மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட விளைநிலைங்களை பாதிக்கும் எத்தகைய திட்டங்களையும் அனுமதிக்க முடியாது என்ப தை கொள்கை பிரகடனமாக அறிவித்திருக்கும் உழவினம் காத்த உழவர் உலகம் தமிழினம் போற்றும் முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியாருக்கு ஜெயலலிதா பேரவை சார்பில் உளமார்ந்த பாராட்டையும், நெஞ்சம் நெகிழ்ந்த நன்றியையும் தெரிவித்து கொள்கிறது. கோதாவரி, கிருஷ்ணா, காவேரி இணைப்பு, வைகை குண்டாறு ஒன்றாகி ஓடும் சிறப்பு அத்திகடவு அவினாசி திட்டம் என்றெல்லாம் ஏரோட்டும் உழவினத்திற்கு நீரோட்டம் பெருக்கி வௌ;ளந்தி சனங்களில் விழி நீர் துடைத்த வேந்தனாக நெடுவாசல் மக்களுக்கு நிம்மதி தந்த நிகரில்லா முதல்வராக நெகிழி என்னும் அரக்கனுக்கு முடிவு கட்டிய சுற்றுச்சுழல் காவலனாக முக்கடல் சூழ்ந்த பாரதத்திற்கே வழிகாட்டும் முன்னோடி மாநிலம் எனும் தலைபாகை சூட்டிய தமிழனாக அருந்தொண்டாற்றி வரும் தமிழக முதலமைச்சரை ஜெயலலிதா பேரவை சார்பில் பெருமிதத்தோடு உளமாற நன்றியினை தெரிவித்து கொள்கிறது.படுகை விவசாயத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திற்கும் கழக அரசின் கொள்கை பிரகடனம் என்பது அந்த பொன்னேட்டு சரித்திரத்தில் மின்னுகிற முத்தாக பதிக்கபடும் என்பது ஏரு உள்ள காலம் வரை எடப்படாடியாரின் பேரு நிலைக்கும் என மதிக்கப்படும் என்பதும் சத்தியம்.
தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால தாவக்களுக்கு தமது அயராது உழைப்பால் தீர்வுகளை தந்து பொற்கால தமிழகத்தை செதுக்கிக்கொண்டிருக்கும் எளிமை சாமானியர் எடப்பாடியாரின் தலைமையிலான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்லாட்சியே 2021-லும் தொடர்ந்திட முதல்வர் எடப்பாடி அரும்பெரும் சாதனைகளே வழித்தடம் அமைத்து வருகிறது என்பதனை பெருமிதத்தோடும் முதல்வர் எடப்பாடியார் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்து மகிழ்கிறது என்று அவர் கூறினார்.