சத்ரபதி சிவாஜி மகராஜ் ஜெயந்தியையொட்டி பிரதமர் புகழாரம்!


சத்ரபதி சிவாஜி மகராஜ் ஜெயந்தியையொட்டி,  பிரதமர்  நரேந்திர மோடி அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழாரம் சூட்டினார்..


“இந்திய அன்னையின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவரும், துணிச்சலின் மொத்த உருவமாகத் திகழ்ந்தவரும், கருணை வடிவானவரும் சிறந்த ஆட்சியை வழங்கியவருமான சத்ரபதி சிவாஜி மகராஜின் ஜெயந்தியையொட்டி, அவருக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன். அவரது வாழ்க்கை லட்சக்கணக்கானோருக்கு ஊக்கம் அளிப்பதாக இப்போதும் உள்ளது.


சத்ரபதி சிவாஜி மகராஜ் அளப்பறிய துணிச்சல்மிக்க வீரராகவும், சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தார். வலிமையான கடற்படையை கட்டமைத்தது முதல் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை செயல்படுத்தியது வரை அனைத்து விதத்திலும் அவர் சிறந்து விளங்கினார். அநீதியையும், அச்சுறுத்தலையும் எதிர்த்தவர் என்ற வகையில் அவர் எப்போதும் நினைவு கூரப்படுவார்” என்று பிரதமர் கூறியுள்ளார்.