'காவிரி டெல்டா மாவட்டங்கள், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்; ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படாது' என, சில தினங்களுக்கு முன், முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பை, அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
விவசாய சங்கப் பிரதிநிதிகள், முதல்வரை சந்தித்து, நன்றி தெரிவித்து வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள, 30 கிராமங்களை சேர்ந்த, விவசாய பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி தலைவர்கள், நேற்று முதல்வரை அவரது வீட்டில் சந்தித்தனர்.நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தாமல் இருக்க, நடவடிக்கை எடுத்ததற்காகவும் நன்றி தெரிவித்தனர்.
காவிரி டெல்டா மாவட்டங்கள், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்! முதல்வருடன் விவசாயிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.!