மத்திய புலனாய்வு பிரிவின் சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவினர் தொடுத்த வங்கி மோசடி வழக்கில் சென்னை எழும்பூர் , கூடுதல் முதன்மை பெருநகர மாஜிஸ்டிரேட் இரண்டு நபர்களுக்கு (27.02.2020) தண்டனை விதித்தார்.
30.12.1995 அன்று தொடுக்கப்பட்ட இந்த வழக்கின்படி, குற்றவாளிகள் சென்னை, தில்லி மற்றும் இதர இடங்களில் 1993-ல் குற்ற சதித்திட்டத்தின் மூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நான்கு போலியான கேட்பு வரைவோலைகளை சமர்ப்பித்து ரூ.2.70 கோடி பெற்றனர் என குற்றம் சாட்டப்பட்டது. சுபத்ரா இன்பெக்ஸ் சென்னை, சிபிகே டிரேடர்ஸ் சென்னை ஆகியவற்றின் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பல்வேறு கிளைகள், மற்றும் மும்பை நோவா ஸ்கோசியா வங்கி வழங்கியதாகக் கூறப்படும் போலி வரைவோலைகள் மூலம் இந்தப் பணத்தை இவர்கள் பெற்றனர்.
இந்த வழக்கில் புலனாய்வு முடிவடைந்து இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை சென்னை எழும்பூர், கூடுதல் முதன்மை பெருநகர மாஜிஸ்டிரேட் முன் தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணைக்கு பின்னர் இந்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கீழ்கண்டவாறு தண்டனை விதி்த்து உத்தரவிட்டது.
வ.எண். | குற்றம் சாட்டப்பட்டவர் பெயர் | தண்டனை |
1 | டி ராஜசேகரன், தனிநபர் (A-1) | 3 ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ.30,000 அபராதம் |
2 | ஆர் நடேஷ் குமார் தனிநபர் (A-2) | 3 ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ.30,000 அபராதம் |
3 | ஆர். அசோக் குமார் தனிநபர் (A-3) ) | விடுதலை |
4 | சி கிருஷ்ணகுமார் தனிநபர் (A-4)
| விடுதலை |
5 | கமல் தனிநபர் (A-5)
| விடுதலை |
சிபிஐ-யின் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு இதனை தெரிவிக்கிறது.
பி.ஐ.பி