ஆம் ஆத்மி கட்சிக்குப் பிரதமர் வாழ்த்து!


தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும்,  அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் பிரதமர்  நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 


     “தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் வாழ்த்துக்கள். தில்லி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் மிகச்சிறப்பாக செயல்பட்ட இவர்களை வாழ்த்துகிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.