இந்தியா-இலங்கை இடையே சர்வதேச விமானங்களை அலையன்ஸ் ஏர் நிறுவனம் இயக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே சர்வதேச பிரிவில் விமானங்களை இயக்க ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத மானியத்துடன் இயங்கும் அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 20 விமானங்களையோ அல்லது மொத்த பயணிகள் கையாளுவதில் 20 சதவீதத்தையோ, உள்நாட்டு இயக்கத்தில் எது அதிகமோ அதை எட்டும் வகையில் இடைக்கால ஏற்பாடாக அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்கு சிறப்பு பகிர்ந்தளிப்புக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


இலங்கையுடன் இந்தியா நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. அந்த நாட்டுக்கான தொடர்பை அதிகரிப்பதிலும், இருநாட்டு மக்களுக்கு இடையிலான நட்புறவை விரிவுபடுத்துவதிலும் இந்தியா ஆர்வம் கொண்டுள்ளது. இந்த ஒப்புதலுக்கு முன்பாக பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களிலிருந்து வர்த்தக ரீதியில் விமானங்கள் இயக்கப்படவில்லை.