துபாய்: ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சு தரவரிசை பட்டியலில், இந்திய வேகம் ஜஸ்பிரித் பூம்ரா நம்பர் 1 அந்தஸ்தை பறிகொடுத்தார். நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் விக்கெட் வேட்டை நடத்தத் தவறிய பூம்ரா 2வது இடத்துக்கு பின்தங்கினார். நியூசி. வேகம் டிரென்ட் போல்ட் முதலிடத்தை பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் கோஹ்லி, ரோகித் முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர். ஆல் ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் ஜடேஜா 3 இடம் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தை இழந்து ஜஸ்பிரித் பூம்ராவுக்கு பின்னடைவு!