கஞ்சா விற்பனை செய்த நபர் கைது


மதுரை,


 மதுரை,D1-தல்லாகுளம் (ச.ஒ) காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் செல்வக்குமார் அவர்கள் காவலர்கள் அப்துல் அபிஸ்கான்,முத்துக்குமார் ஆகியோர்களுடன் ரோந்து பணியில் இருந்த போது மதுரை டவுன் கோரிப்பாளையம், பட்டறைக்காரத் தெரு, சந்திப்பு அருகில் மதுரையை சேர்ந்த விவேகானந்தன் 32/2020, த/பெ.ஜோதிஅழகர், தனக்கன்குளம், மதுரை என்பவர் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ கைப்பற்றப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்..