உரிமை கோரப்படாத மூத்த குடிமக்களின் அஞ்சலக சேமிப்பு கணக்குகள்


அஞ்சலக வங்கிகளில் இருக்கும் சேமிப்பாளர்களின் உரிமை கோரப்படாத பணத்தை நிர்வகிப்பது மற்றும் கையாள்வது குறித்த விதிகள்(மூத்த குடிமக்கள் நலநிதி விதிகள்,2016) பற்றி மத்திய அரசு அறிவிக்கை செய்துள்ளது.  இந்த விதிகளின்படி, உரிமை கோரப்படாமல் இருக்கும் இதுபோன்ற கணக்குகளில் உள்ள பணம் (பத்தாண்டுகளுக்கு மேலாக இயக்கத்தில் இல்லாத அல்லது இயக்கப்படாத கணக்குகள்) குறித்த கணக்குகளின் விவரங்கள் பகிரங்கமாக அறிவிக்கை செய்யப்படும்.  இதன்படி, அஞ்சலகத்துறை இவ்வகை கணக்குகளின் விவரங்களை அதன் இணையதளத்தில் (www.indiapost.gov.in) வெளியிட்டுள்ளது.  இந்தப் பட்டியலை அஞ்சலகங்கள் அலுவலக அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  மேலும் விவரங்களுக்கு உள்ளூர் அஞ்சலகங்களை தொடர்புகொள்ளலாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சலகத் துறை தலைமை அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.